முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்டுகள் அபாயகர மானவர்கள்: மம்தா

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா, நவ.17 - தீவிரவாதிகளைக் காட்டிலும் மாவோயிஸ்டுகள் மிகவும் அபாயகரமானவர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் சமீப காலமாக மாவோயிஸ்டுகள் பல்வேறு வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதை அடுத்து மாவோயிஸ்டுகளை ஒழிக்க மேற்கு வங்க போலீசாரும் மத்திய துணை ராணுவ படையினரும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டு நடவடிக்கையை 4 மாதங்களுக்கு நிறுத்தினால் தாங்களும்  போர் நிறுத்தத்தை மேற்கொள்வதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இதை மேற்கு வங்க அரசு ஏற்கவில்லை.
இது குறித்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தீவிரவாதிகளை விட மாவோயிஸ்டுகள் மிகவும் அபாயகரமானவர்கள் என்று குறிப்பிட்டார்.
அவர்கள் (மாவோயிஸ்டுகள்) அமைதி வழிக்கு திரும்பாத வரையில்  அவர்கள் மக்களை கொல்வதை  நிறுத்தாத வரையில் அவர்களுடன் பேச்சு நடத்த முடியாது. மாவோயிஸ்டுகளின் வன்முறை செயல்களை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது என்றும் மம்தா காட்டமாக கூறினார்.
சட்டம் ஒழுங்கை தனது அரசு பராமரிக்கும் என்றும் மக்களை கொன்று குவிப்பதை பார்த்துக்கொண்டு தாங்கள் விரலை சூப்பிக்கொண்டு இருக்க முடியாது என்றும் மம்தா மிக காட்டமாக கூறினார்.
மாவோயிஸ்டுகளுக்கு இன்னும் கூட சந்தர்ப்பம்  கொடுக்கிறோம். அவர்கள் வன்முறையை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்பி வர வேண்டும். அப்படி வந்தால் அவர்களின் வாழ்க்கைக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.  மக்களுக்கு  பாதுகாப்பு கொடுப்பது தனது அரசின் தலையாய கடமை என்றும் இதில் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் மம்தா ஆவேசமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்