முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி ஏவுகணை சோதனையில் சாதனை படைத்த பெண்

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.18 - அக்னி-4 ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த வெற்றியின் பின்னணியில் கேரள பெண் விஞ்ஞானி ஒருவரின் சாதனையும் அடங்கியுள்ளது. அக்னி-4 ஏவுகணை சோதனை கடந்த ஆண்டு முதன் முதலாக நடத்தப்பட்டபோது அந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இதனால் அக்னி - 4 ஏவுகணையை சீரமைக்கும் பொறுப்பு ராணுவ ஆய்வுத்துறையில் உயர்பதவியிலுள்ள டெசி தாமசிடம் என்ற பெண் விஞ்ஞானியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இவர் கேரளாவைச் சேர்ந்தவர். 48 வயதான டெசிதாமஸ் ஏவுகணை தயாரிப்பு திட்டத்திற்கு தலைமையேற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தலைமையில் செயல்பட்ட குழுதான் அக்னி 4 ஏவுகணையை சிறப்பாக சீரமைத்து சோதனையிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த பொறுப்பை ஏற்றபோதே டெசிதாமஸ் ஏவுகணை பெண் என்ற சிறப்பைப் பெற்றார். சோதனை வெற்றி பெற்றுள்ளதால் இவர் அக்னி புத்திரி என்று புகழப்படுகிறார்.
அணு ஆயுதங்களை ஏந்தி 3500 கி.மீட்டர் வரை சென்று தாக்கும் திறனுள்ள அக்னி -4 ன் வெற்றி ஏவுகணை தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல் ஆகும். இத்தகைய நவீன ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இந்த ஏவுகணையின் மூலம் ஏவுகணை தொழில்நுட்பத்தில் சீனாவுக்கு நிகரான பலத்தை இந்திய ராணுவமும் பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். இத்தகைய அற்புத சாதனையை செய்துள்ள டெசிதாமஸ், கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும்போதே ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே இதுதொடர்பான படிப்பில் எம்.டெக். முடித்தார்.
ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவில் 1988 ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஏவுகணை திட்ட பிரிவில் டெசி தாமஸ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வழிகாட்டுதலின் பேரில் பல ஏவுகணை திட்டப்பணிகளை இவர் சிறப்பாக செய்துள்ளார். டெசி தாமஸ் இதுகுறித்து தெரிவிக்கையில், அறிவியலுக்கு ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. இந்த துறையில் நான் ஒரு விஞ்ஞானி. இந்த துறை மிகவும் முக்கியம் வாய்ந்தது. என் பிரிவில் மேலும் 6 பெண் விஞ்ஞானிகளும் உள்ளனர். அக்னி - 4 ஏவுகணை வெற்றியில் அவர்கள் அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று அடக்கமாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago