முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக தேர்தலின் போது ரவுடிகளை வன்முறையில் ஈடுபடுத்த தி.மு.க. திட்டம்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.10 - தமிழக சட்டசபை தேர்தலின்போது பண பலத்தை கொண்டும் ரவுடிகளை ஏவி விட்டும் வன்முறையில் ஈடுபட தி.மு.க. அரசு திட்டமிட்டிருப்பதாக தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் மனு கொடுத்துள்ளது. தமிழகம், புதுவை,கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாமில் 2 கட்டமாகவும் மேற்குவங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே தேர்தலுக்கான ஆயத்த பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபடத்துவங்கிவிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. சேர்ந்துள்ளது. அதேசமயத்தில் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்படாமல் போய்விட்டது. பின்னர் தி.மு.க.வினர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்த பின்னர் தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. இது ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறத்தில் முதலில் தேர்தல் நடக்கும் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது. தமிழகத்திற்கு துணை ராணுத்தினர்களும் மத்திய படையினரும் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.  வாக்காளர்களுக்காக காரில் பணம் கொண்டு செல்கிறார்களா என்பதையெல்லாம் துணை ராணுவத்தினர் சோதித்து வருகிறார்கள். அதாவது தேர்தலில் பணம் விளையாடாமல் இருக்க தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் ஆயத்த பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி தலைமையில் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் கமிஷனர்கள் கலந்துகொண்டனர். மேலும் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை கலந்துகொண்டார். கூட்டத்தின்போது 5 மாநிலங்களிலும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தேர்தல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. போன்ற கட்சிகள் வலியுறுத்தின. 

அ.தி.மு.க. சார்பாக தேர்தல் கமிஷனிடம் ஒரு புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி இந்த தேர்தலுக்கு பின்னர் நீடிக்காது. அதை கருத்தில் கொண்டு தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். தி.மு.க. வினர் முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த பணத்தை பயன்படுத்தியும் அதிகார துஷ்பிரயோகம் செய்யவும் தி.மு.க. வினர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் தேர்தலின்போது ரவுடிகளின் துணையுடன் கலவரத்தில் ஈடுபட செய்யவும் திட்டமிட்டுள்ளனர். கலவரம் நடந்தால் பெண்கள், அப்பாவி மக்கள் பயந்துகொண்டு போய்விடுவார்கள். அதை பயன்படுத்தி கள்ள ஓட்டு போடவும் தி.மு.க. வினர் கருதியுள்ளதாக தெரிகிறது. இதை தடுக்க தேர்தல் கமிஷன் தமிழகத்தில் தேவையான இடங்கள், பதட்டம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் அமைதியாகவும் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கூட்டத்திற்கு பின்னர் செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தேர்தலின்போது தி.மு.க.வினர் பணத்தை நடமாட விட்டும் ரவுகளை ஏவியும் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளோம் என்றார். இதை தடுக்க தமிழகத்திற்கு கூடுதல் துணை ராணுவம்,மத்தியப்படையை  அனுப்ப வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago