முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழை

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.18 -வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் கடலோர மாவட்டங்களிலும் பிற பகுதிகளிலும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு அக்டோபர் 24 ம் தேதி தொடங்கியது. நவம்பர் 5 ம் தேதிவரை தொடர்ந்து மழை பெய்தது. வழக்கமாக வடகிழக்கு பருவமழையால் டிசம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு 43 செ.மீட்டர் மழை கிடைக்கும். ஆனால் இப்போதே 32 செ.மீ. மழை பெய்திருக்கிறது. சிறிது கால இடைவெளிக்குப் பிறகு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்த மழை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதி முதல் ஆந்திர கடற்கரை பகுதியில் மத்திய மேற்கு வங்கக் கடல்வரை பரவி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது குமரிக்கடல் முதல் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி வரை நீடிக்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியின் கடற்கரை மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
நேற்று திருவாரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் அதிக அளவாக 6 செ.மீ மழை பெய்துள்ளது. நேற்று கனமழையின்  காரணமாக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்