முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை வேந்தன் மீது நில அபகரிப்பு புகார்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தர்மபுரி, நவ.19 - தி.மு.க. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேரூராட்சி நிலத்தை அபகரித்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாமாண்டபட்டி என்ற இடத்தில் பேரூராட்சியின் சார்பில் கடந்த 1996 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது பழத்தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பேரூராட்சியின் வருவாயை அதிகரிக்க மா, கொய்யா, சப்போட்டா ஆகிய பழ மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வந்தன. பின்னர் தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த முல்லைவேந்தன் பழத்தோட்டத்தினை அழித்துவிட்டு, அதில் 15 ஏக்கர் நிலத்தை தனது மகன் கரிகாலன் பெயரில் பதிவு செய்துள்ளார். இதே பகுதியில் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு பாத்தியமான அரசு புறம்போக்கு நிலம் சுமார் 85 ஏக்கரை ஏழைகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் வழங்குவதாக கூறி  மக்களை ஏமாற்றி அதையும் அபகரித்து மொத்தம் 155.32 ஏக்கர் நிலத்தில் வேலியிட்டு பண்ணைத் தோட்டம் அமைத்துள்ளார். இதுகுறித்து உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு புதிதாக பொறுப்பேற்ற தலைவர் தனசேகரன் மற்றும் துறைத்தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் பேரூராட்சி அதிகாரிகளுடன் சென்று நில அளவு செய்யும்போது முல்லைவேந்தன் 155.32 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பேரூராட்சி நிலத்தை மீட்டு முல்லைவேந்தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகிகள் பொதுமக்களுடன் ஊர்வலமாக சென்று தர்மபுரி கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் அதிகாரி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது தொடரும் நில அபகரிப்பு புகார் மூலம் வலியுறுத்தும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்