முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பயங்கர பூகம்பம்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

டோக்கியோ,மார்ச்.- 10 - ஜப்பானில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி இருந்தது. சுனாமியும் வீசியது. மக்கள் பீதியடைந்தனர். பூகம்பம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் இருக்கிறது. அதனால் அந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு அந்த நாட்டில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் லேசான பொருட்களை கொண்டுதான் வீடுகள் கட்டப்படுகின்றன. தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் அளவுக்கும் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் பரப்பளவுக்கும் இடையே நேற்று காலையில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ஆனால் இந்த பூகம்பத்தால் உயிர்சேதமோ சொத்து சேதமோ ஏற்படவில்லை. அணு உலைகள் இயங்கிக்கொண்டியிருந்தன. வீடுகள், கட்டிடங்கள் மட்டும் லேசாக குலுங்கின. இதனால் உள்ளே இருந்த மக்கள் கொஞ்சம் பீதி அடைந்தனர். 

வழக்கமாக ஏற்படும் பூகம்பத்தை விட நேற்று ஏற்பட்ட பூகம்பம் பெரிய அளவில் இருந்ததால் தலைநகர் டோக்கியோவில் வீடுகளும் கட்டிடங்களும் அதிர்ந்தன. டோக்கியோவில் மட்டும் சுமார் 3 கோடி பேர் வசிக்கிறார்கள். உலகத்திலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் டோக்கியோவும் ஒன்றாகும். ஓடிக்கொண்டியிருந்த ரயில்களும்,பஸ்களும் ஆங்காங்கே நின்றன. தொலைகாட்சிகள் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்