முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் வீடுகளில் சோதனை

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.19 - டி.என்.பி.எஸ்.சி.யில் நடந்த முறைகேடு தொடர்பாக சேர்மன் செல்லமுத்து உள்பட 14 பேர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தமிழக அரசு ஊழியர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி​யில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆதாரங்களுடன் ஏராளமான புகார்கள் வந்தன. அதன் பேரில் கடந்த மாதம் 14​ந் தேதி டி.என்.பி. எஸ்.சி. சேர்மன் செல்லமுத்து உள்பட உறுப்பினர்கள் 14 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 14 பேர் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு சிறப்புக் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். தேர்வாணைய உறுப்பினர்கள் 14 பேர் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.சோதனைக்குள்ளான 14 அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்கள் டி.என்.பி.எஸ்.சி.யில் வகித்து வரும் பதவி விவரம் வருமாறு:​ 1. மைக்கேல் ஜெரால்டு, டி.என்.பி.எஸ்.சி. இணைச் செயலாளர், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை. 2. சுகுமார், டி.என்.பி.எஸ்.சி., அண்டர் செகரட்டரி, ராஜா அண்ணாமலைபுரம். 3. ரவி, டி.என்.பி.எஸ்.சி., அண்டர் செகரட்டரி, ராஜாஜி நகர், மடிப்பாக்கம். 4. உஷா (பிரிவு அதிகாரி), அண்ணா நகர். 5. ராமமூர்த்தி (உதவி பிரிவு அதிகாரி), சாந்தி காலனி, அண்ணா நகர். 6. குமரேசன் (உதவிப் பிரிவு அதிகாரி), அயப்பாக்கம். 7. சதீஷ்குமார் (உதவிப் பிரிவு அதிகாரி), திருவல்லிக்கேணி. 8. முருகன் (உதவிப்பிரிவு அதிகாரி), திருவல்லிக்கேணி. 9. ரவிச்சந்திரன் (உதவிப்பிரிவு அதிகாரி), அயன்புரம். 10. லோகநாதன் (உதவிப்பிரிவு அதிகாரி), அண்ணா நகர். 11. சையது (உதவிப்பிரிவு அதிகாரி), அண்ணா சாலை. 12. ராதாகிருஷ்ணன்(உதவிப்பிரிவு அதிகாரி), திருமங்கலம் காலனி, அண்ணா நகர் மேற்கு 13. பிரபாகரன்(உதவிப்பிரிவு அதிகாரி), பழைய வண்ணாரப்பேட்டை. 14. பாலாஜி (உதவிப்பிரிவு அதிகாரி), பேங்க் காலனி, மாதவரம் பால்பண்ணை காலனி.   லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.ஜி.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் ஐ.ஜி.குணசீலன், டி.ஐ.ஜி. வெங்கட்ராமன் மேற்பார்வையில் கூடுதல் டி.எஸ்.பி. ஜெயலட்சுமி தலைமையில் 14 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பொறுப்பேற்று இந்த அதிரடி சோதனையை நடத்தினார்கள். இந்த சோதனையில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளுக்கான சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக காவல்துறை விடுத்துள்ள விளக்கம் வருமாறு:​ சட்டவிதி முறைகளை பின்பற்றி தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையால் சென்னை தலைமையக குற்ற எண்.22/2011, தேதி 13​10​2011, ஊழல் தடுப்புச் சட்டம் 1988​ன் பிரிவுகள் 13(2), 13(1)(டி), மற்றும் 15 மற்றும் பிரிவுகள் 120 (பி), 175 மற்றும் 186 இந்திய தண்டனைச் சட்டங்களில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1. உதவி பல்மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அதிகாரnullர்வமாக வெளியிடுவதற்கு முன்பு பார்வையிட கோரிய தன் மூலம் குற்ற அலுவலர்கள் குற்றமுறு நடவடிக்கை புரிய முயன்று தவறான வழிகளில் பணப்பயன் பெற முயற்சித்தமைக்காக பிரிவுகள் 15, 13(1)(டி) ஊழல் தடுப்பு சட்டம் 1988​ன்படி குற்றம் சாட்டப்பட்டவர்களாவர். 2. 2006 முதல் 2008ம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், தகுதியற்ற பணியாளர்களை தேர்வு செய்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை அதிகாரவரம்புக்கு உட்பட்டு விசாரணைக்கு அனுமதி மறுத்து அதிகாரதுஷ்பிரயோகம் செய்ததன் மூலம் குற்ற அலுவலர்கள் பிரிவுகள் 13(2), 13(1)(டி) ஊழல் தடுப்பு சட்டம் 1988​ன்படி குற்றம் சாட்டப்பட்டவர்களாகின்றனர். 3. தொகுதி​1 அலுவலர் தேர்வுகளில் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடாமல் தடுக்கும் பொருட்டு இ.ஆ.ப. அலுவலரான செயலர், தமிழ்நாடு தேர்வாணையம் அவர்கள் செயல்பட முடியாமல் குற்ற அலுவலர்கள் தடுத்ததன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 186​ன் படி குற்றம் சாட்டப்பட்டவர்களாவர். 4. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சட்டவரமுறைக்கு உட்பட்டு விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை விசாரணைக்கு ஆஜர்படுத்த கோரிய போது ஆவணங்களை விசாரணைக்கு ஆஜர்படுத்த மறுத்ததன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 175​ன்படி அதிகார துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களாகிறார்கள். வழக்கு விசாரணைக்கு முக்கிய கட்டமாக தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 14​10​2011 அன்று சோதனை நடைபெற்றது. அச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது அடுத்தகட்டமாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்