முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

51-வது தடகளப் போட்டி: டி.ஜி.பி. பரிசளித்து பாராட்டு

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - தமிழக காவல் துறையின் 51-வது மாநில தடகள போட்டி நேரு அரங்கில் நவ.14 முதல் நவ.16 வரை நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு டி.ஜி.பி. ராமானுஜனம் பரிசளித்து பாராட்டினார். இது பற்றி விபரம் வருமாறு:-

தமிழக காவல் துறையின் 51-வது மாநில தடகள போட்டிகள் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த நவ.14 முதல் நவ.16 வரை கோலாகலமாக நடைபெற்றன. போட்டிகளை செம்மையாக நடத்துவதற்காக ஆயுதப்படை காவல்துறை கூடுதல் இயக்குநர், நரேந்திரபால்சிங், ஆயுதப்படை காவல்துறைத்தலைவர் பிரமோத்குமார் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களால் விழாவிற்கான ஏற்பாடுகள் திறம்பட செய்யப்பட்டன. 

இப்போட்டிகளை காவல்துறை இயக்குநர் (பயிற்சி) லத்திகா சரண் நவ.14 அன்று காலை 8.00 மணிக்கு துவக்கி வைத்தார். தமிழக காவல் துறையைச் சேர்ந்த சென்னை காவல் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தமிழ்நாடு அதிரடிப்படை மற்றும் பயிற்சி மற்றும் ஆயுதப்படை ஆகிய ஏழு காவல் மண்டல அணிகளைச் சேர்ந்த ஆண் மற்றும் ஆயுதப்படை ஆகிய ஏழு காவல் மண்டல அணிகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சுமார் 423 நபர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இப்போட்டியில் பல்வேறு புதிய சாதனைகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பெண் சார்பு ஆய்வாளர் பயிற்சி தமிழ்செல்வி என்பவரும், பெண்களுக்கான 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் அவில்தார் 1910 ரேவதி என்பவரும்,  ஆண்களுக்கான நிளம் தாண்டுதலின் போட்டியில் ஆயதப்படையைச் சேர்ந்த நாயக் 3523 சுரேஷ் என்பவரும், 800 மீ ஓட்டப்பந்தயத்தில் ஆயதப்படையைச் சேர்ந்த நாயக் 2051 ஜெயராஜ் என்பவரும், 20 கி.மீ நடை பந்தயத்தில் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் 3834 வினோத் குமார் என்பவரும், புதிய மாநில சாதனைகள் படைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த ஆண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் பரிசினை 19 புள்ளிகள் பெற்று ஆயுதப்படையை சேர்ந்த காவலர் 1546 வீரமணி என்பவரும், ஒட்டு மொத்த பெண்களுக்கான தனிநபர் சாம்பியன்சிப் பரிசினை 31 புள்ளிகள் பெற்று சென்னை பெருநகரத்தை சேர்ந்த காவலர் 32650 தமிழரசி என்பவரும் பெற்றுள்ளனர். ஆண்களுக்கான ஒட்டுமொத்த அணிகளுக்கான சாம்பியன்சிப் பட்டத்தினை 224 புள்ளிகளை பெற்று ஆயுதப்படையும், பெண்களுக்கான ஒட்டுமொத்த அணிகளுக்கான சாம்பியன்சிப் பட்டத்தினை 134 புள்ளிகளை பெற்று சென்னை பெருநகர் முதலிடத்தையும், ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பட்டத்தினை 338 புள்ளிகள் பெற்று ஆயுதப்படையினர் தட்டிச் சென்றனர்.

நவ.16 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் கே.ராமானுஜம், தலைமை விருந்தினராக பங்கேற்று, சிறப்புரையாற்றி வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளும், ஒட்டுமொத்த அணிக்கு கேடயமும் வழங்கி சிறப்பித்தார்.

ஆயதப்படை காவல்துறை கூடுதல் இயக்குநர் நரேந்திரயில் சிங் வரவேற்பரை வழங்கினார். இதனை தொடர்ந்து ஆயுதப்படை காவல்துறை தலைவர், பிரமோத்குமார் நன்றியுரை வழங்கி சிறப்பித்தார்.

நிறைவு நாளான நவ.16 அன்று தமிழ்நாடு சிறப்பு காவல் 3-ம் அணியை சேர்ந்த சுமார் 90 ஆண் மற்றும் பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.

இவ்விழாவில் காவல்துறை கூடுதல் இயக்குநர்களும், காவல்துறை தலைவர்களும், காவல்துறை துணைத் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago