முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தபால்துறை கேரம்: தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - சென்னையில் நடைபெற்ற தபால்துறை அணிகளுக்கு இடையேயான அகில இந்திய கேரம் போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தபால் துறையில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக அகில இந்திய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கேரம் விளையாட்டுக்கான தேசிய போட்டி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஹால் ஆப் கேரம் அரங்கில் நடைபெற்றது. துவக்க நாளன்று போட்டிகளை சர்வதேச கேரம் வீரரும், அர்ஜூனா விருது பெற்றவருமான ஏ.மரிய இருதயம் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்ற இதில் ஆண்கள் அணி பிரிவில் கர்நாடகா முதலிடமும், தமிழகம் 2வது இடமும் பிடித்தன. அதே போல் பெண்கள் அணி பிரிவில் மத்திய பிரதேசம் முதலிடமும், தமிழகம் 2வது இடமும் பிடித்தன. 

ஒற்றையர் ஆண்கள் பிரிவில் ஜாகீர் பாஷா(கர்நாடகா) சாம்பியன் பட்டம் பெற்றார். ராஜேஷ் 2வது இடம் பிடித்தார்.

ஒற்றையர் பெண்கள் பிரிவில் மோதிய இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பரிமளாதேவி, மும்தாஜ் பேகத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

அதே போல் ஆண்கள் இரட்டையர் போட்டியில் எம்.சுமன்-எல்.சிலம்பரசன்(தமிழ்நாடு) ஜோடியும், பெண்கள் இரட்டையர் போட்டியில் பரிமளாதேவி - மும்தாஜ் பேகம் (தமிழ்நாடு) ஜோடியும் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றினர்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி கைப்பற்றியது. போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தபால்துறை சர்வீசஸ் போர்டு உறுப்பினர் மேஜர் ஜெனரல் ஏ.ஆர்.ஏ. ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் தமிழக தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் சாந்திநாயர், சென்னை நகர போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் எம்.எஸ்.ராமானுஜம் மற்றும் போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்கள் கே.ராமச்சந்திரன், குல்பீர்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்