முக்கிய செய்திகள்

இடுக்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கோட்டயம், நவ.19 - கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நேற்று திடீர் என்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை 5.27 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 2.8 ஆக பதிவானது. அடுத்து 5.45 மணிக்கு மீண்டும் ஒரு நில அதிர்வு ஏற்பட்டது. இது 3.2 ஆக ரிக்டர்  அளவையில் பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் குலுங்கின. சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: