முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாஸ்தா கோவில் நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.20- விருதுநகர் மாவட்டம் வேளாண் விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று சாஸ்தா கோவில் நீர்தேக்கத்திலிருந்து பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திட்டத்தின்கீழ் உள்ள கண்மாய்கள் மூலம் பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, விருதுநகர் மாவட்ட வேளாண்மை பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திட்டத்தின்கீழ் உள்ள கண்மாய்கள் மூலம் பாசன சாகுபடிக்காக இன்று (20.11.11) முதல் தண்ணீர் திறந்துவிட நான் உத்தரவிட்டுள்ளேன். இதனால், விருதுநகர் மாவட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்க பாசன அமைப்பின்கீழ் உள்ள  3,130 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்