முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறில் நீர்க்கசிவு வதந்தியை கிளப்புகிறார்கள்: தமிழக அதிகாரி

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

கம்பம், நவ. - 21 - கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் முல்லைப் பெரியாறு அமையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதை ஆய்வில் கண்டறிந்ததாக கேரள அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.  இடுக்கி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 2.8 ரிக்டர் அளவிலும், அதற்கு அடுத்தபடியாக 3.2 ரிக்டர் அளவிலும் நில அதிர்வு ஏற்பட்டது. ஏலப்பாறை, உப்பத்தா, ஐயப்பன் கோவில், இடுக்கி அணை உள்ளிட்ட பல இடங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டது. உடனே கேரள அரசியல்வாதிகளில் சிலர் பெரியாறு அமைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குரல் கொடுத்தனர். இதை தொடர்ந்து கேரள நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் டோமி ஜார்ஜ் தலைமையில் பொறியாளர்கள் குழு பெரியாறு அணையில் உள்ள மெயின் அணை, பேபி அணை, மதகு பகுதிகளிலும், கேலரி பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் வரை ஆய்வு மேற்கொண்டது.  ஆய்வின் முடிவில் செயற்பொறியாளர் டோமிஜார்ஜ் கூறுகையில், பெரியாறு அணையின் மெயின் அணையில் 17 மற்றும் 18 வது பிளாக்கின் இணைப்பு பகுதிகளில் அதிகளவு நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. நில அதிர்வுக்குப் பிறகு இந்த கசிவு அதிகரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை கேரள அரசுக்கு அளிக்கவிருக்கிறோம் என்று தெரிவித்தார்.  இந்நிலையில் மத்திய புவியியல் அறிவியல் துறையின் இயக்குனர் ஜான் மாத்யூ தலைமையிலான புவியியல் துறையினர் நில அதிர்வினால் பெரியாறு அணையில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு அறிக்கையை கேரள அரசிடம் வழங்கவுள்ளதாக கூறிய அவர்கள் அணையில் நீர்க்கசிவு குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.  இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேஷ் கூறும் போது, இடுக்கி மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பெரியாறு அணையை விட 5 மடங்கு பெரிய அணையான இடுக்கி அணை அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரியாறு அணையில் நில அதிர்வு உணரப்படவில்லை. மேலும் அணையில் ஜீப் பேஸ் அளவிலும் மாற்றம் இல்லை. தேவையில்லாமல் சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்