முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் விமானமே தாக்கினாலும் அணுமின் நிலையம் பாதிப்படையாது- இயக்குனர்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கன்னியாகுமரி, நவ.- 21 - போர் விமானமே தாக்கினாலும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ஜி  ராணடேவின் பிறந்தநாள் விழாவும், விவேகானந்த கேந்திரிய வித்தியாலயா பள்ளியின் அறிவியல் கண்காட்சி நிறைவு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் கலந்துகொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், கூடங்குளத்தில் ரூ. 13 ஆயிரத்து 171 கோடி செலவில் அணுமின் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றது. முதலாவது அணு உலை அமைக்கப்பட்டுவிட்டது. அதற்கான வெப்ப சோதனையும் நடந்து முடிந்துவிட்டது. தற்போதைய எதிர்ப்பு போராட்டத்தால் கடந்த 45 நாட்களாக பணிகள் எதுவும் நடைபெறவில்லை. 5 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்கள் அவர்களின் ஊர்களுக்கு திரும்பி சென்றுவிட்டனர். எனவே அணுமின் நிலையம் டிசம்பர் மாதம் செயல்பட துவங்குமா என்பதை தற்போது சொல்ல முடியாது. எதிர்ப்பு போராட்டம் காரணமாக மத்திய அரசு முத்துநாயகம் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு அணு மின் நிலையத்தை ஆய்வு செய்தது. மாநில அரசு அமைத்த கமிட்டியும் மத்திய கமிட்டியும் சந்தித்துப் பேசினர். 

போராட்டக்காரர்கள் எழுப்பிய 50 கேள்விகளுக்கு  மத்திய கமிட்டி பதிலளித்துள்ளது. மத்திய கமிட்டி நெல்லை மாவட்ட கலெக்டரையும் சந்தித்துப் பேசியது. இந்த அணு மின் நிலையத்தில் 4 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றின்மூலம் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையம் பாதுகாப்பானது. எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எந்த கசிவும் ஏற்படாது. பாதுகாப்பு தன்மையை பரிசீலித்த பின்புதான் அணு மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. சுனாமி, பூகம்பம் வந்தாலும் பாதிக்காது. போர் விமானமே வந்து மோதினாலும் பாதிப்பு இருக்காது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago