முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேறொருவர் நிலத்தை மோசடியாக விற்ற வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 21 - வேறொருவர் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கறிஞர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து பின்பு ஜாமீனில் விடுதலை செய்தனர். இது குறித்த விபரம் வருமாறு:- சங்கர் (46) பொழிச்சலூர் என்பவர் வேளச்சேரி கிராமம் சர்வே எண்.303/2-ல் கண்ட பேபிநகர் விரிவாக்கத்தில் உள்ள சுமார் 2400 சதுரஅடி கொண்ட மனை எண்.5ஐ சத்தியா மற்றும் அவரது வாரிசுதார்ரகளின் பொது அதிகார முகவர் சந்திரசேகரன் என்பவர் மூலம் கடந்த 1995-ம் ஆண்டு கிரையம் பெற்றுள்ளார். சில வருடங்கள் கழித்து சங்கர் மேற்படி தனது மனைவியை பார்க்க சென்றபோது வேறு ஒரு நபர் காம்பவுண்ட் போட்டிருப்பது தெரிந்து தாலுக்கா அலுவலகம் மூலம் ஆவணத்தை சரிபார்த்தபோது மேற்படி தான் வாங்கிய நிலம் சர்வே எண்.303/2-ல் இல்லை என்பதும் மேற்படி இடம் சர்வே எண்.302-ல் உள்ளடக்கியது என்பதும் தெரியவந்துள்ளது.  வேறொருவருக்கு சொந்தமான நிலத்தை தன்னை ஏமாற்றி மோசடி செய்து விற்ற சந்திரசேகரன் மற்றும் அவரது சகோதரர் சாம்பசிவம் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்திரசேகரனும் அவரது சகோதரர் சாம்பசிவமும் வழக்கறிஞர்களாக இருப்பதும் தெரியவந்தது. புகார்தாரர் சங்கரை ஏமாற்றி மேற்படி நிலத்தை விற்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மேற்படி நபர்கள் கிரையபத்திரத்தில் வில்லங்கம் செய்து கிரையம் செய்திருப்பதும் மேற்படி இடத்திற்காக நஷ்டஈடாக ரூ.6 லட்சத்திற்கு காசோலைகள் கொடுத்து மேற்படி காசோலைகளும் வங்கியில் ரிட்டன் ஆகி விட்டிருப்பது தெரியவந்தது. சென்னை காவல் ஆணையாளர் திரிபாதி ஆணைப்படி காவல் கூடுதல் ஆணையாளர் அபய்குமார்சிங் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ராதிகா மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு உதரி ஆணையாளர் ஜேசுராஜன் தலைமையில் காவல் உதரி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் 18-ந் தேதி வழக்கறிஞர் சந்திரசேகரனை கைது செய்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர் குற்றவியல் நடுவர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago