முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரைமாநகராட்சி மண்டலதலைவர் தேர்தலில் சாலைமுத்து, ஜெயவேல், கே.ராஜபாண்டியன், வெற்றி

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,நவ.- 21 - மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் தேர்தலில் 4 மண்டலங்களிலும் அதிமுக வெற்றி பெற்றது.  மதுரை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 மண்டலங்கள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயராக வி.வி.ராஜன்செல்லப்பா வெற்றி பெற்று மதுரை மாநகராட்சி மேயரானார். துணை மேயராக கோபாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து 4 மண்டலங்களுக்கும் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று தேர்தல் நடந்தது. இதில் அதிமுகவை சேர்ந்த 84 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் மண்டல தலைவர்களுக்கான வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலுடன் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ அறிவித்தார். இதை தொடர்ந்து 9.30 மணிக்கு மதுரை மாநகராட்சி கூட்ட அரங்கில் மண்டல தலைவர்களுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெ.சாலைமுத்து (தெற்கு) கே.ஜெயவேல்(வடக்கு) கே.ராஜபாண்டி(மேற்கு) எம்.ராஜபாண்டியன்(கிழக்கு) ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இவர்களை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் காலை 10.45 மணிக்கு அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் நடராஜன் அறிவித்தார். இதை தொடர்ந்து வெற்றி பெற்ற மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், கே.ராஜபாண்டி, எம்.ராஜபாண்டியன் ஆகியோருக்கு ஆணையாளர் நடராஜன் சான்றிதழ் வழங்கினார். பின்னர் வெற்றி பெற்ற மண்டல தலைவர்களுக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, துணை மேயர் கோபாலகிருஷ்ணன்.எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் மாலை மற்றும் சால்வை அணிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்