முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சி மண்டலகுழு தலைவர்தேர்தல்14 மண்டலங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றியது

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 21 - சென்னை மாநகராட்சியில் 15​க்கு 14 இடங்களை மண்டல குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது.  சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 17-​ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி 5 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கூடுதல் பெற்று மேயர் ஆனார். மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 168 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. 24 வார்டுகளிலும் காங்கிரஸ் 2 வார்டுகளிலும், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தை கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. சுயேச்சையாக வென்ற 2 கவுன்சிலர்கள் அ.தி.மு.க. வில் இணைந்ததால் அ.தி.மு.க. பலம் 170 ஆக உயர்ந்தது. பின்னர் நடந்த துணை மேயர் தேர்தலில் அ.தி. மு.க. வைச்சேர்ந்த பெஞ்சமின் வெற்றி பெற்றார். சென்னை மாநகாட்சியின் முதல் கூட்டம் வருகிற 23-​ந் தேதி நடைபெறுகிறது. நேற்று மண்டலகுழு தலைவர் தேர்தல் நடை பெற்றது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளது. இதற்கான தேர்தல் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தேர்தலை நடத்தினார். மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலையில் மண்டலகுழு தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.   15 மண்டலங்களில் 14 மண்டல குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. இங்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்கள் பெயர் வருமாறு:​ 1​வது மண்டலம் (திருவொற்றியூர்) ​ தனரமேஷ் (9​வது வார்டு கவுன்சிலர்) 2​வது மண்டலம் (மணலி) ​ கே.தங்கசிவம் (16​வது வார்டு கவுன்சிலர்). 3​வது மண்டலம் (மாதவரம்) ​ வேலாயுதம் (26​வது வார்டு கவுன்சிலர்). 4​வது மண்டலம் (தண்டையார்பேட்டை) ​ கார்த்திகேயன்.(43​வது வார்டு) 5​வது மண்டலம் (ராயபுரம்) ​ இரா.பழனி (49​வது வார்டு) 6​வது மண்டலம் (திரு.வி.க.நகர்) ​ சுந்தர் (64​வது வார்டு) 7​வது மண்டலம் (அண்ணா நகர்) ​ வெங்கடேசன். (106​வது வார்டு) 8​வது மண்டலம் (தேனாம்பேட்டை) ​ சக்தி (112​வது வார்டு) 9​வது மண்டலம் (கோடம்பாக்கம்) ​ எல்.ஐ.சி. மாணிக்கம். (134​வது வார்டு) 10​வது மண்டலம் (வளசரவாக்கம்) ​ சேகர் (155​வது வார்டு) 11​வது மண்டலம் (ஆலந்தூர்) ​ வெங்கட்ராமன் (166​வது வார்டு) 12​வது மண்டலம் (அடையாறு) ​ முருகன் (179​வது வார்டு) 13​வது மண்டலம் (பெருங்குடி) ​ ராஜாராம் (183​வது வார்டு) 14​வது மண்டலம் (சோழிங்கநல்லூர்) ​ சுந்தரம் (197​வது வார்டு) 7​வது மண்டலத்தில் தி.மு.க. வெற்றி 7​வது மண்டலக்குழு தலைவர் (அம்பத்தூர்) பதவியை தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜோசப் சாமுவேல் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  பிற்பகல் 2.30 நிலைக்குழுவுக்கான உறுப்பினர் தேர்தல் நடை பெற்றது. இன்று நிலைக்குழு தலைவர் தேர்தலுக்கான தேர்தல் நடக்கிறது. நிதி மற்றும், வரி விதிப்பு, பணிகள், நகரமைப்பு, கல்வி, சுகாதாரம், கணக்கு தணிக்கை ஆகிய குழுக்களுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பின்னர் நியமன கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

க்ச்ச்சி டூச்சிடீ
வெற்றி பெற்ற அ.தி.மு.க. 14 மண்டலகுழு தலைவர்களுடன் மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் உள்ளதை படத்தில் காணலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்