முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சீரிஸ் ஹாக்கி: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 4 கோடி

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. - 21 - உலக சீரிஸ் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 4 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச அளவில் இதுவரை எந்த ஹாக்கி போட்டிக்கும் இவ்வளவு பெரிய பரிசு தொகை வழங்கப்பட்டதில்லை.  ஐ.பி.எல். போட்டியை போல உலக சீரிஸ் ஹாக்கி என்ற பெயரில் ஹாக்கி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த 17 ம் தேதி முதல் ஜனவரி 22 ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மும்பை, டெல்லி, சென்னை, ஐதராபாத், பெங்களூர், சண்டிகர், புனே, போபால், பஞ்சாப், ராஞ்சி, ரூர்கேலா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் 200 பேர் பங்கேற்கின்றனர்.  இது தொடர்பாக உலக சீரிஸ் ஹாக்கி போட்டியின் ஏற்பாட்டு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் ரூ. 10 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 4 கோடியும், 2 வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 2 கோடியும், 3 மற்றும் 4 வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு ரூ. ஒரு கோடியும் பரிசு தொகை வழங்கப்படும். சிறந்த ஆட்டக்காரருக்கு ரூ. ஒரு கோடியும், சிறந்த இந்திய வீரருக்கு ரூ. 50 லட்சமும், ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றி தேடி தரும் வீரருக்கு ரூ. 50 லட்சமும், அதிக கோல் அடிப்பவருக்கு ரூ. 25 லட்சமும், சிறந்த புதுமுக வீரருக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago