முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே அதிக அதிகாரம் வாய்ந்த தலைவர் ஜிண்டாவோ

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

நியூயார்க்,மார்ச்.11 - உலகிலேயே அதிக அதிகாரம் மற்றும் சக்தி வாய்ந்த தலைவராக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ விளங்குகிறார் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகில் அதிக அதிகாரமும் சக்தியும் வாய்ந்த தலைவர்கள் விபரம் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு இதழ் ஆய்வு செய்தது. இதில் உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில் 5-ல் ஒரு பாகத்தை கொண்டுள்ள சீனாவின் அதிபர் ஹூ ஜிண்டாவோ முதல் இடத்தில் இருப்பது தெரியவந்தது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் இடத்தில் இருந்தார். இந்தாண்டு அவரை ஜிண்டாவோ மிஞ்சி விட்டார். மேற்கத்திய நாடுகளின் அதிபர்களை காட்டிலும் சீன அதிபர் ஜிண்டாவோவால் ஓடும் நிதிகளை வேறு திசையில் திருப்பி விட முடியும். புதிய நகரங்களை அமைத்திட முடியும். எதிரிகளை கோர்ட்டு அனுமதி இல்லாமல் சிறையில் அடைக்க முடியும். இண்டர் நெட்களை முடக்க முடியும். இரண்டாவது இடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இருக்கிறார். இவர் கடந்தாண்டு முதல் இடத்தில் இருந்தார். சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா 3-வது இடத்தில் இருக்கிறார். உலக மக்கள் தொகையில் 6-ல் ஒரு பாகம் கொண்ட இந்தியாவில் சோனியா காந்தி செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். இவர் உலகிலேயே 9-வது இடத்தில் இருக்கிறார். இவர் காங்கிரஸ் தலைவராக 4-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் நேரு-இந்திரா காந்தி குடும்பத்தின் அடுத்த வாரிசு என்ற பெயரை சோனியா காந்தி நிலை நிறுத்தியுள்ளார் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்