முக்கிய செய்திகள்

திருமங்கலம் நகரில் தேர்தல் விதிமுறை மீறல்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
Tirumangalam1

 

திருமங்கலம், மார்ச்.11 - திருமங்கலம் நகரில் தேர்தல் விதிமுறை மீறல் கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட அதிரடி ஆய்வின் போது நடத்தை விதிமுறைகளை மீறி நடைபெற்று வந்த கால்வாய் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்திடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலின் போது நடைபெறும் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள், போலீசார் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் நகரின் பல்வேறு இடங்களில் தேர்தல் விதிமுறை மீறல் கண்காணிப்பு குழுவினர் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினார்கள். திருமங்கலம் தாலுகா வழங்கல் அலுவலர் மனோகரன், நகராட்சி ஆணையாளர் சாகுல்ஹமீது  மற்றும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்திய ஆய்வின் போது ராஜாஜி தெரு, ஷெல்டன் பள்ளி, டி.எஸ்.பி. அலுவலக பின்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக கால்வாய் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கால்வாய் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவினர் முறையாக தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் பணியாணை பெற்றிருந்தால் மட்டுமே வேலைகளை தொடர அனுமதிக்கப்படும் என்று கூறிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: