முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பம்பையில் புதிய பாதையை கேரள முதல்வர் திறந்து வைக்கிறார்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை,நவ - 24 - பம்பையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ரூ.1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையை கேரள முதல்வர் திறந்து உம்மன்சாண்டி திறந்து வைக்கிறார். இது குறித்த விபரம் வருமாறு:- பம்பையில் அகில பாரத ஐயப்ப சேவை சங்கத்தின் சார்பில் ரூ.1.45 கோடி மதிப்பிலான 1.1/4 கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்ட புதிய பாதை திருவேணி சங்கம் முதல் கன்னிமூல கணபதி கோயில் வரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கத்தின் 21 செண்ட் நிலத்தையும் புதிய பாதைக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதையை கேரள முதல்வர் உம்மன்சாண்டி வருகிற 26-ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கிறார். இதனால் விழாக்காலங்களில் ஏற்படும் கூட்டநெரிசலை மிகவும் குறைய வாய்ப்புள்ளது. இவ்விழாவில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தலைவர் தென்னலா பாலகிருஷ்ணன் பிள்ளை, செயலாளர் வேலாயுதன்  நாயர், கேரள மாநில கூடுதல் உள்துறை செயலாளர் மற்றும் சபரிமலையின் மாஸ்டர் பிளான் குழுவின் தலைவர் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ்., சபரிமலை முன்னாள் சிறப்பு அதிகாரி ராஜேந்திரன் நாயர், தமிழ்மாநில அமைப்பின் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ஐய்யப்பன், பொருளாளர் கருப்பன் செட்டி, தொண்டர் படை முதன்மை தளபதி ஜெகதீஷ், தளபதி சாரங்கபாணி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர்கள்  வெள்ளை சீருடையில் முக்கிய பிரமுகர்களுக்கு அணிவகுத்து வரவேற்பு கொடுக்கிறார்கள். இதைத்தொடர்ந்து சேவா சங்கத்தின் நிலக்கல் முகாமை முதல்வர் துவக்கி வைக்கிறார். இம்முகாமில் சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு இலவசமாக பழுதுபார்க்கப்படும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!