முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.9 கோடி டெலிபோன் பாக்கி வைத்திருக்கும் 405 எம்.பிக்கள்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 24 - எம்.பிக்கள் 405 பேர் ரூ. 9 கோடி அளவுக்கு டெலிபோன் கட்டண பாக்கி வைத்துள்ளனர்.  தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஒருவர் டெலிபோன் கட்டணம் பாக்கி வைத்திருக்கும் எம்.பிக்கள் விவரத்தை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவுக்கு அரசு தொலைத் தொடர்பு துறை பதில் அனுப்பி உள்ளது. இதில் டெலிபோன் கட்டண பாக்கி வைத்திருக்கும் எம்.பிக்களின் பெயர் மற்றும் பாக்கி தொகை விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி முன்னாள் எம்.பிக்கள் 399 பேர் ரூ. 7. 10 கோடிக்கு டெலிபோன் கட்டண பாக்கி வைத்துள்ளனர். இந்நாள் எம்.பிக்கள் 6 பேர் 1.97 கோடி டெலிபோன் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. முன்னாள் எம்.பிக்களில் அதிக பாக்கி வைத்திருப்பவர் ஜனார்த்தன யாதவ் ஆவார். பா.ஜ.க.வை சேர்ந்த இவர் ரூ. 22.29 லட்சம் பாக்கி வைத்துள்ளார். அடுத்த இடத்தில் காங்கிரசை சேர்ந்த பசவராஜ் பாட்டீல் உள்ளார். இவர் செலுத்த வேண்டியது ரூ. 17.2 லட்சமாகும். மறைந்த காங்கிரஸ் எம்.பி. முகமது கான் பெயரில் ரூ. 15.28 லட்சம் பாக்கியுள்ளது.  இந்நாள் எம்.பிக்களான நரேந்திரபுகானியா(காங்.) ரூ. 13.37 லட்சமும், ராம்சுந்தர்தாஸ்(ஐ.ஜ.தளம்) ரூ. 9.47 லட்சமும், பக்தசரண்தாஸ்(காங்.) ரூ. 3.31 லட்சமும் டெலிபோன் பாக்கி வைத்துள்ளனர். தற்போது எம்.பிக்கள் அனைவரும் தலா ஒன்றரை லட்சம் அழைப்புகள் இலவசமாக பேசிக் கொள்ளலாம். இவ்வளவு பெரும் தொகை பாக்கியை எம்.டி.என்.எல். எவ்வாறு வசூலிக்க போகிறது எனத் தெரியவில்லை. இது போன்ற பாக்கி தொகைகள் எம்.பிக்களின் சம்பளம் மற்றும் பென்சன் தொகையில் இருந்து பிடித்தம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுபாஸ்சந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!