முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தவாசியில் பட்டுசேலைகளை ஏற்றிசென்ற வேனை மறித்து விசாரணை

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

வந்தவாசி, மார்ச்.11 - வந்தவாசியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரிகள் ரூ.1 கோடி மதிப்புள்ள பட்டு சேலைகளை ஏற்றிச்சென்ற வேனை மடக்கி விசாரணை செய்தனர்.

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு இலவசங்களை வழங்குவதற்காக ஏதாவது பொருட்கள் கடத்தப் படுகிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.

வந்தவாசியில் தேர்தல் பிரிவு பறக்கும் படை தாசில்தார் எல்லப்பன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு படையினர் வந்தவாசி ஐந்து கண் வாராவதி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து பட்டு சேலைகளை ஏற்றிக்கொண்டு வந்த டி.என்.21-ஏ.சி.7140 என்ற வேனை மடக்கி சோதனை செய்தனர். வண்டியில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பட்டு சேலைகள் இருந்தன.

இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேற்கண்ட பட்டு சேலைகள் காஞ்சிபுரத்தில் இருந்து திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு செல்வதாக தெரிய வந்ததை அடுத்து அதிகாரிகள் உரிய ஆவணங்களை ஒப்படைக்க வலியுறுத்தினர். உரிய ஆவணங்கள் காட்டப் பட்டதை அடுத்து பட்டு சேலை ஏற்றி வந்த வேன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப் பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்