முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 3 கோடி செலவில் பால்பண்ணை அபிவிருத்தி திட்டம்: மு.பாலாஜி தகவல்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

விருதுநகர், நவ.- 24 - விருதுநகர் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்கிடும் வகையில் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் சார்பில் ரூ 3 கோடி செலவில் தீவிர பால்பண்ணை அபிவிருத்தித்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் விருதுநகர் பால் குளிர்விக்கும் நிலையம் மற்றும் திருவில்லிபுத்தூர் பால் பதப்படுத்தும் ஆலை ஆகியவற்றிற்கு மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  அது சமயம் பால் குளிர்வித்தல், பால் பதப்படுத்துதல், பால் பரிசோதனை அறை ஆகிய இடங்களை பார்வையிட்டார். பின்னர் திருவில்லிபுத்தூர் பால் பதப்படுத்தும் ஆலையில் தேசிய வேளாண்மை  வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 3000 லிட்டர் கொள்ளளவுள்ள  சூரிய ஒளி மூலம் தண்ணீரை சுடுநீராக்கும் அமைப்பினையும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோ 4 பசுந் தீவன விதைப்பண்ணையும் பார்வையிட்டார். அதுசமயம் பால் கூட்டுறவு ஒன்றியத்தின் தினசரி பால் சேகரம் 12000 லிட்டராக உள்ளது எனவும், அதில் 10000 லிட்டர்  பால் விருதுநகர் மாவட்ட நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும்,  மீதமுள்ள பால் சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாய்வின் போது ஆவின் பொது மேலாளர் சதாசிவம், மேலாளர் இராமநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்மொழி அமுது மற்றும் ஆவின் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்