முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி 15வது வார்டு இடைத்தேர்தல்: செல்லூர் கே.ராஜூ பிரச்சாரம்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,நவ.- 24 - மதுரை மாநகராட்சி 15வது வார்டு இடைதேர்தலில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று வீதி,வீதியாக சென்று பிரச்சாரம் செய்து அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயலட்சுமிக்கு ஆதரவு திரட்டினார்.   மதுரை மாநகராட்சி தேர்தலின் போது 15வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ஜெயமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த வார்டில் இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 15வது வார்டு அதிமுக வேட்பாளராக எஸ்.பி.ஜெயமணியின் மனைவி ஜெ.ஜெயலட்சுமி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றும் வரும் வேளையில் நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான புதுஜெயில் ரோடு, கிரம்மர்புரம், மில்காலனி, முரட்டன் பத்து மற்றும் மேலப்பொன்னகரம் ஆகிய பகுதிகளில் வீதிவீதியாகவும், வீடுவீடாகவும் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டுக்களை சேகரித்தார். இந்த ஓட்டு சேகரிப்பின் போது அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயலட்சுமி, அமைச்சருடன் வீடு,வீடாக சென்றார்.   இந்த பிரச்சாரத்தின் போது மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, துணை மேயர் கோபாலகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாநகர் அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, துணைசெயலாளர் சி.தங்கம், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, எம்.ராஜபாண்டியன், கே.ஜெயவேல், கே.ராஜபாண்டியன், பேரவை செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, பாசறை செயலாளர் டி.வினோத்குமார், முன்னாள் எம்எல்ஏ வளர்மதி ஜெபராஜ், பகுதி கழக செயலாளர் ஜெயபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் முனியசாமி, எல்லீஸ்நகர் ஏ.இந்திரா, பாசறை வடக்கு பகுதி செயலாளர் அசோக், வட்ட செயலாளர் வெங்கிடு, கவுன்சிலர்கள் பி.ஜெயராமன், கேசவபாண்டியம்மாள், எம்.என்.முருகன், புதூர் அபுதாகீர், முனியாண்டி, தங்கபாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் டிஎஸ்பி முத்துசாமி, வட்ட பிரதிநிதி கே.எஸ்.ராமநாதன், மீன் பாண்டி, வட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், எஸ்.துளசிதாஸ், சிறுபாண்மை பிரிவு சிக்கந்தர்பாட்சா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago