முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: கன மழை பெய்யும்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.26 - வங்க கடலில் இலங்கையை ஒட்டிய தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து இதுவரை 3 முறை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாமல் வறண்ட வானிலை காணப்பட்டது. இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. கடல் பகுதியில் இருந்து குளிர்ந்த காற்று பலமாக கரையை நோக்கி வீசுவதால் இரவு நேரங்களில் குளிரும் அதிகமாக காணப்படுகிறது. இதை தொடர்ந்து வளி மண்டல மேல் அடுக்கில் ஈரப்பதம் அதிகரிக்க தொடங்கியது. 

இப்போது வங்க கடலின் தென்கிழக்கு திசையில் இலங்கையை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவாகியுள்ளது. இது வலுப்பெறும் நிலையில் உள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதியில் அனேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசையில் நகரக்கூடும். அப்போது தமிழகத்தில் படிப்படியாக மழை அதிகரிக்க தொடங்கும் என்பதால் தமிழகத்தில் நாளை (இன்று) கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்