முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு உலை வெடித்த இடத்தில் மீண்டும் நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

புருஷிமா, நவ.25 - ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் புருஷிமா நகரில் உள்ள அணுஉலை வெடித்து விபத்து ஏற்பட்டது. சுனாமி தாக்கியதாலும், நிலநடுக்கத்தாலும் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அணுஉலை வெடித்த இடத்தில் இன்னும் கதிர்வீச்சு உள்ளது. அணுமின் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.9 ஆக பதவாகி இருந்தது. பூமிக்கடியில் 37 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் இருந்தது. 

இதனால் சுனாமி ஏற்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என்று இதுவரை தகவல் இல்லை. இதே போல் கிரீஸ் நாட்டுக்கு தெற்கே உள்ள தீவு கூட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளியாக பதிவாகி இருந்தது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கிரீஸ் நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago