முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி உண்டியலில் 162 வைரக்கற்கள்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, நவ.25 - திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் காணிக்கையாக 162 வைரக்கற்கள் இருந்தன. திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் மூலஸ்தானம் அருகில் உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் விலைமதிப்பற்ற வைரக் கற்களை காணிக்கையாக செலுத்தியிருந்தார். ஒரு பையில் கட்டி அந்த வைரக் கற்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அந்த பையில் 162 வைரக் கற்கள் இருந்தது. இந்த வைரத்தின் தரம் குறித்த குறிப்புகளும் அந்த பையில் எழுதிப் போடப்பட்டு இருந்தது. இந்த கற்கள் 72 வகையைச் சேர்ந்தவை. இந்த வைரக் கற்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வைரக் கற்களை காணிக்கை செலுத்திய பக்தரின் விபரம் எதுவும் தெரியவில்லை. 

இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசராஜு தெரிவிக்கையில், திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யப்படும் ஆபரணங்களில் இந்த வைரக் கற்கள் பதிக்கப்படும் என்றார். மேலும் அவர் கூறுகையில், மும்பையில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் வருகிற 1 ம் தேதி திறக்கப்படும் என்றார். 3 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் ஒரு தளத்தில் கோவிலும், மற்ற 2 தளத்தில் தகவல் மையம் மற்றும் விற்பனை நிலையம், அர்ச்சகர் விடுதிகள் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்