முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவு-அயர்லாந்து அணிகள் - இங்கிலாந்து-வங்காளதேசம் மோதல்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மொகாலி, மார்ச். 11 - உலகக் கோப்பை போட்டியில் இன்று 2 லீக் ஆட்டம் நடக்கிறது. ஒரு ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவு மற்றும் அயர்லாந்து அணியும், மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணியும் மோத இருக்கின்றன. இது பற்றிய விபரம் வருமாறு -  மொகாலியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பி பிரி வில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோத இருக்கின்றன. 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இதுவரை 3 லீக் ஆட்டத்தில் விளையா  டி உள்ளது. இதில் இரண்டில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் தோற்றது. தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரி க்காவிடம் தோல்வி அடைந்தது. 

இரண்டாவது லீக் ஆட்டத்தில் 215 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை தோற்கடித்தது. பின்பு நடந்த 3 -வது லீக் ஆட்டத்தில் வங் காள தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இன்று நடைபெறும் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு அயர்லாந்து அணி எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடு ம். அந்த அணி 3 ஆட்டத்தில் ஒன்றில் வென்றது. மற்ற 2 போட்டியில் தோற்றது. 

அயர்லாந்து அணி முதல் ஆட்டத்தில், வங்காள தேசத்திடம் 27 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அடுத்து நடந்த 2 -வது ஆட்டத்தில், இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

3 -வது ஆட்டத்தில் இந்தியாவிடம் 5 விக்கெட்டில் தோற்றது. கால் இறுதி வாய்ப்பில் இருப்பதற்தாக இரு அணிகளும் வெற்றி பெற கடு மையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிட்டகாங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்ட த்தில், இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

பின்பு நடந்த 2 -வது ஆட்டத்தில் இந்தியாவுடன் டை செய்தது. 2 -வது ஆட்டத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. சென்னையில் நடந்த அந்த அணிக்கான 3 -வது ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவை 6 ரன்னில் தோற்கடித்தது. 

தற்போது புள்ளிகள் பட்டியலில் 5 புள்ளிகள் பெற்று இருக்கும் இங்கி லாந்து அணி வங்காளதேசத்தை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதற்காக இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். 

வங்காளதேசம் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 87 ரன்னில் தோற்றது. 2 -வது ஆட்டத்தில் அயர்லாந்தை 27 ரன்னில் வென்றது. 3 -வது ஆட்டத்தில், மேற்கு இந்தியத் தீவிடம் மிகவும் மோசமாக தோ ற்றது. 

கால் இறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் வங்காளதேச அணி இன் றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. உள்ளூர் மைதானத்தில் ஆடுவதால் அந்த அணி வெற்றி பெற கடுமையாக போராடும். 

உலகக் கோப்பையில் இன்று நடக்க இருக்கம் 2 லீக் ஆட்டங்களும், இ.எஸ். பி.என், ஸ்டார் கிரிக்கெட் , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனி ல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்