முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஜனாதிபதி 3 நாள் சுற்றுப்பயணம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, நவ.25 - மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நேற்று காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றார். இவர் இந்த 3 நாட்களும் ஜம்முவில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவரது பயணத்தை முன்னிட்டு ஜம்மு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கத்ரா நகரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி இன்று உரை நிகழ்த்துகிறார். புகழ்பெற்ற ரகுநாத் கோவிலுக்கு செல்லும் பிரதீபா பாட்டீல் அங்கு ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி பல்கலைக்கழகம் அமைத்துள்ள தியான மற்றும் ஆன்மீக மையத்தையும் திறந்து வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்