முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையின் முன்னாள் அமைச்சர் பாஸ்போர்ட் முடக்கப்படும்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.25 - புதுவையில் கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் கடந்த செப்டம்பர் மாதம் 29 மற்றும் 30-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வை திண்டிவனம் மையத்தில் எழுதினார். இந்த தேர்வை ஆள் மாறாட்டம் செய்து எழுதியது கண்டு பிடிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்ட குற்றவியல் போலீசார் கல்யாணசுந்தரம் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து கல்யாணசுந்தரம் தலைமறைவானார். அவரை கைது செய்ய தமிழக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். 

ஆனால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையே கல்யாணசுந்தரம் சார்பில் சென்னை ஜகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு வரும் வரை கல்யாணசுந்தரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து அதுவரை தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கல்யாணசுந்தரத்தின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஜகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து கல்யாணசுந்தரம் மீண்டும் தலைமறைவானார். 

இதனால் எதிர்கட்சிகள் இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி முதல்வர் ரங்கசாமி கல்யாணசுந்தரத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இதற்கிடையே கல்யாணசுந்தரம் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று(25-ந்தேதி) நடைபெறுகிறது. 

தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் கல்யாணசுந்தரத்தை கைது செய்ய தமிழக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கல்யாணசுந்தரத்தின் பாஸ்போர்டை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மண்டல ஜ.ஜி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்த ஜஜி சைலேந்திரபாபு சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுவையில் 3 தனிப்படைகள் அமைத்து கண்காணித்து வருகிறோம். அவருடைய பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தேர்வ எழுத அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் ஆதவனையும் தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கல்யாணசுந்தரம், ஆதவன் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony