முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``டேம் 999'' படத்திற்கு தடைவிதிக்க முதல்வர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.25 - ``டேம் 999''  என்ற படத்திற்கு தடைவிதிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அறிக்கை விபரம் வருமாறு:- கடற்படை மாலுமியாக பணியாற்றி, திரைப்பட இயக்குநராக மாறிய கேரளத்தை சேர்ந்த சோஹன் ராய் என்பவர் இயக்கிய டேம் 999 என்ற ஆங்கிலப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு,  இன்று தமிழகத்தில் திரையிடப்படவுள்ளது.

ஊழல் மேயர் ஒருவர் வலுவற்ற அணையை கட்டுவதாகவும், அந்த அணையின் உடைப்பால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போலவும், அதன் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பலியாவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், டேம் 999 என்னும் தலைப்பில் முல்லைப் பெரியாறு அணையை கருத்தில் கொண்டு வைக்கப்பட்டதுபோல் உள்ளது. மேலும், இந்த படத்தின் இயக்குநர் அளித்த பேட்டிகளிலும், வெளியிட்ட அறிக்கையிலும், 1975 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட அணை உடைப்பு பேரிடர் அபாயம், முல்லைப் பெரியாறு அணையிலும் உள்ளது என்றும், இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு உடைத்து, புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், முல்லைப்பெரியாறு அணையை நேரடியாகக் காண்பிக்கவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள், முல்லைப்பெரியாறு அணையை நினைவு கூறுவதாக உள்ளது.

படத்தின் தலைப்பு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைப் பற்றி மறைமுகமாக எடுத்துக்கூறி, முல்லைப்பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, தமிழக கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவும், இந்தப்படம்  அமைந்துள்ளதால், 25.11.11 முதல் திரையிடவுள்ள டேம் 999 என்ற படத்திற்கு தடைவிதிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்