முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக ஒருவழிப் பாதையாகும் குமுளி மலைச்சாலை

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

கம்பம், நவ. - 26 - ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் குமுளி மலைச்சாலை பாதையை ஒரு வழிப் பாதையாக்க தமிழக, கேரள அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  தேனி மற்றும் இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களின் ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடந்தது. இதில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக, கேரள எல்லை பகுதிகளில் வசதி செய்து கொடுப்பது மற்றும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்வது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இரு மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தேனி, கம்பம், குமுளி, வண்டிப்பெரியார் வழியாக செல்லும் பக்தர்களின் வாகனம் லோயர்கேம்ப், குமுளி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தேனி வழியாக வரும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டு ஏலப்பாறை, குட்டிக்கானம் வழியாகவும், சபரிமலையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் கம்பம் வழியாக தேனி செல்லுமாறும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை வரும் டிசம்பர் மாதம் 15 ம் தேதி முதல் ஜனவரி 15 ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.  மேலும் பக்தர்களின் வசதிக்காக ஆம்புலன்சு சேவையும், ரூட் மேப் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, இரு மாநிலத்தாலும் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து இரு மாநில காவல்துறையினரும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது என்றும், இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்