முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச் 11-நடிகர் விக்ரம் கவுரவ டாக்டர் பட்டம் பெறுகிறார்.சேது, பிதாமகன், தில், தூள், காசி, அந்நியன், ராவணன் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவரும், ரசிகர்களால் சியான் என செல்லமாக அழைக்கப்படுபவருமான நடிகர் விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது இத்தாலியில் உள்ள பல்கலைக்கழகம். 

பல்வேறு கதாபாத்திரங்களில் அற்புதமாக நடித்தமைக்கு அதனை கவுரப்படுத்தும் வகையில் இவ்விருதினை அளிப்பதாக இத்தாலில் உள்ள யுனிவர்சிட்டி பாப்புலர் டெக்லி ஸ்டெடி டிமிலோனா பல்கலை இயக்குநர்களும், செனட் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மே மாதம் 29-ம் தேதி இத்தாலி யூனிவர்சிடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இவ்விருதினை பெறுகிறார் விக்ரம். 

ஒரு வெளிநாட்டு பல்கலைக் கழகம் முதன் முதலாக ஒரு தமிழ் நடிகருக்கு வழங்கும் டாக்டர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்