முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.22.55 லட்சம் செலவில் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்- ஜெயலலிதா

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 27 - ரூ.22.55 லட்சம் செலவில் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து விபரம் வருமாறு:- நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை பெற்றால்தான் எந்த செல்வத்தையும் பெற இயலும், என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக ஊரகப் பகுதிகளில், சுகாதார வசதி இல்லாத கிராமங்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதன்  அடிப்படையில் 30 படுக்கைகள் கொண்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த,  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி திருச்சி சுகாதார மாவட்டம்,  மணச்சநல்லூர் வட்டாரத்திலுள்ள சமயபுரம்;   வேலூர் சுகாதார மாவட்டம்,  வேலூர் வட்டாரத்தில் உள்ள கொனவட்டம், வாலாஜா வட்டாரத்தில் உள்ள சுமைதாங்கி; கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் உள்ள பேஜிபள்ளி; கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம், திருநாவலூர் வட்டாரத்திலுள்ள சேந்தநாடு; சின்ன சேலம் வட்டாரத்திலுள்ள அம்மாகளத்தூர்; நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள மாதிரவேலூர்; திருப்nullர் சுகாதார மாவட்டம், பல்லடம் வட்டாரத்திலுள்ள புளியம்பட்டி; பெரம்பலூர் சுகாதார மாவட்டம், பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள எளம்பலூர்; ஈரோடு சுகாதார மாவட்டம், பெருந்துறை வட்டாரத்திலுள்ள காஞ்சிக்கோயில்; நம்பியூர் வட்டாரத்திலுள்ள மளையம்பாளையம்; திருப்பத்தூர் சுகாதார மாவட்டம், கந்திலி  வட்டாரத்திலுள்ள கோரட்டி; சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம், வாசுதேவநல்லூர் வட்டாரத்திலுள்ள தென்மலை; திருவள்ளூர் சுகாதார மாவட்டம், திருவள்ளூர் வட்டாரத்திலுள்ள கல்யாணகுப்பம்; பழனி சுகாதார மாவட்டம், வேடசந்தூர் வட்டாரத்திலுள்ள கனப்பாடி; புதுக்கோட்டை சுகாதார மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்திலுள்ள ராப்nullசல்;  கரூர் சுகாதார மாவட்டம், தாந்தோணி வட்டாரத்திலுள்ள வடக்குபாளையம்; கே.பரமத்தி வட்டாரத்திலுள்ள தம்பிவாடி; தஞ்சாவூர் சுகாதார மாவட்டம், ஒரத்தநாடு வட்டாரத்திலுள்ள உக்கநாடு கேளையூர்; தூத்துக்குடி சுகாதார மாவட்டம், தூத்துக்குடி வட்டாரத்திலுள்ள லூர்தம்மாள்புரம் ஆகிய 20 இடங்களில் புதியதாக  7 கோடியே 71 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
புதியதாக     ஏற்படுத்தப்படவுள்ள  ஒவ்வொரு   ஆரம்ப    சுகாதார    நிலையத்திற்கும்,    2 மருத்துவ அதிகாரி,1 இளநிலை உதவியாளர், 1 ஓட்டுநர், 1 மருந்தாளுநர்,  1 சுகாதார செவிலியர், 1 ஆய்வுக்கூட  நுட்புனர்​கிரேடு ஐஐஐ, 1 துப்புரவாளர், 1 ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் என மொத்தம் 9 பணியிடங்கள்  ஏற்படுத்தப்படும்.    மேலும், அனைத்து கிராமங்களுக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில், மருத்துவ கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள ஆரம்ப சுகாதா நிலையங்களை அனைத்து வசதிகளுடன் கூடிய 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள் ஆகிய வசதிகள்  கொண்ட ஆரம்பர சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தவும்,  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.  இதன்படி, அறந்தாங்கி சுகாதார மாவட்டம், கரம்பகுடி வட்டாரம் மலையூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; செய்யார் சுகாதார மாவட்டம், அனுக்காவூர் வட்டாரம், அக்கூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம்,  கிணத்துக்கடவு வட்டாரம், நல்லாட்டிபாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; ஈரோடு சுகாதார மாவட்டம், டி.என்.பாளையம் வட்டாரம், டி.என்.பாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டாரம், ரிஷிவந்தியத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; பழநி சுகாதார மாவட்டம், குஜிலியாம்பாறையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; nullந்தமல்லி சுகாதார மாவட்டம், nullந்தமல்லியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சைதாப்பேட்டை  சுகாதார மாவட்டம், லத்தூர் வட்டாரம், பவன்ஜுரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சேலம் சுகாதார மாவட்டம், கொங்கனாபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; பனமரத்துப்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; தாரமங்கலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; பி.என்.பாளையம் வட்டாரம், ஆரியபாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சிவகங்கை சுகாதார மாவட்டம், திருப்புவனம் வட்டாரம், nullவந்தியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சிவகாசி சுகாதார மாவட்டம், வெம்பக்கோட்டை, கல்லமனைக்கான்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; தஞ்சாவூர் சுகாதார மாவட்டம், பேராவூரணி வட்டாரம், சிறுவாவிதூதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சேதுபவசத்திரம் வட்டாரம், அழகியநாயகிபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; திருவள்ளூர் சுகாதார மாவட்டம், புழல் வட்டாரம், நரவாரிகுப்பத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், வில்லிவாக்கம் வட்டாரம், போரூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பத்தூர் சுகாதார மாவட்டம், கண்திலி வட்டாரம், குனிச்சியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; காட்பாடி வட்டாரம், திருவலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; திருப்nullர் சுகாதார மாவட்டம், குடிமங்கலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், புதுபாளையம் வட்டாரம், காரப்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; உதகமண்டலம் சுகாதார மாவட்டம், கூடலூர் வட்டாரம், நெல்லக்கோட்டையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; விழுப்புரம் சுகாதார மாவட்டம், வல்லம் வட்டாரம், மேல்சிதாமூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்  என மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 22 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு, தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும்  கூடுதலாக  3 மருத்துவ அதிகாரிகள், 1 செவிலியர், 1 ரேடியோகிராபர், 1 ஒட்டுநர்,  1 துப்புரவுப் பணியாளர்,  1 ஆரம்ப சுகாதார நிலைய  ஆண் பணியாளர், 1 ஆரம்ப சுகாதார நிலைய  பெண் பணியாளர், ஆக மொத்தம் 9 பணியிடங்கள்  உருவாக்கப்படும். இவ்வாறு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலமும், தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம்  உயர்த்தப்படுவதன் மூலமும், கிராமப் புறங்களில்  வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே நவீன மருத்துவ வசதிகளைப் பெற்று நோயற்ற வாழ்வு வாழ வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago