முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில்லறை விற்பனை நிலையங்களில் 51 சதவீதம் வெளிநாட்டு நிறுவனம்-ஆனந்தசர்மா

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 27 - 51 சதவீதம் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு மூலமாக 13 சதவீதம் வளர்ச்சி பெறும் என்று மத்திய அமைச்சர் ஆனந்தசர்மா கூறியுள்ளார். ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகள் இந்தக் கொள்கையை வரவேற்று இருப்பதாக தெரிவித்தார். இதனை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் மட்டுமே சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெளிவுபடுத்திய அமைச்சர், நமது நாட்டிலுள்ள 8,000 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து 53 நகரங்கள் மட்டுமே இதற்காக தேர்வு செய்யப்படும் என்றார். நமது நாட்டின் பிற பகுதிகளில் தற்பொழுதுள்ள ஏற்பாடே தொடரும் என்று தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட துறையில் 51 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீடு செய்யப்படுமானால், அத்துறையில் 30 சதவீதம் கிராமப்புற மற்றும் குடிசை தொழில்கள், சிறு, நடுத்தர தொழில்களிலிருந்து பெற வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.   இதனால் சிறு, நடுத்தர தொழில்துறை பயனடையும். சிறு வர்த்தகர்கள் வருங்காலம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, பெரிய தொழில் நிறுவனங்களுடன் சிறு வர்த்தகர்களும் தொடர்ந்து இயங்குவது மட்டுமேயன்றி, புதிய கொள்கைகளின் மூலமாக 13 சதவீத வளர்ச்சியையும் பெறுவார்கள் என்றார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு அமைச்சரை, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் க.மா.ரவீந்திரன் வரவேற்றார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்