முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் பெருமழை: கண்மாய்கள் - குளங்களை-கலெக்டர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தேனி, நவ. - 27 - தேனி மாவட்டத்தில் பெய்த பெருமழையால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.  மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்ப தொடங்கியதால் குளங்களில் கரைகள் உடையாமல் இருந்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள கோவில்பட்டி, துரைச்சாமிபுரம், திருமலாபுரம் மற்றும் செங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் கண்மாய் கரைகள் உடையாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், கண்மாய்களுக்கு நீர் வரும் மாற்று கால்வாயில் தற்காலிக தடுப்புகளை அகற்றி நீரை குளத்திற்கு அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

மலைக்காலங்களில் அனைத்து தருணங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், குளங்களின் கரைகள் உடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறித்து வரும் தகவல்களின் பேரில் போர்க்கால அடிப்படையில் குளத்து நீர் வெளியேறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் போஜையா, ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜராஜன், ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்