முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொங்கு இளைஞர் பேரவை மற்றும் கவுண்டர் பேரவைக்கு ஒரு தொகுதி

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 12 - அ.தி.மு.க. கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை மற்றும் கவுண்டர்கள் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியுடன் தே.மு.தி.க., இடதுசாரிகள், ம.தி.மு.க., சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், புதிய தமிழகம் மற்றும் பல கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்றும் கவுண்டர்கள் பேரவை நிறுவன அமைப்பாளர் தனியரசு சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இந்த கட்சிக்கு போட்டியிட ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார். 

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று மாலை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் உ.தனியரசு உள்ளிட்ட நிர்வாகிகள்  நேரில் சந்தித்தனர். அப்போது நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது. இந்நிகழ்வின் போது அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். 

சந்திப்புக்கு பின் நிறுவன தலைவர் உ.தனியரசு நிருபர்களிடம் கூறுகையில், கொங்கு வேளாளர் பேரவை தி.மு.க.வுடன் கூடாத நட்பு வைத்திருக்கிறது. கொங்கு வேளாளர்கள், கவுண்டர்களுக்கு துரோகம் செய்து உள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!