முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா டிராவில் முடிந்தது

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

மும்பை, நவ. - 27  - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி கடைசி நாளன்று டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி 2-வது இன்னிங்சில் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் இந்திய வீரர்கள் மந்தமாக ஆடியதால் வெற்றி வாய்ப்பு நழுவியது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.  மே.இ.தீவு அணியின் 2-வது இன்னிங்சில் இந்திய சுழற் பந்து வீச்சாள ர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். இதில் ஓஜா 6 விக்கெட்டையும், அஸ்வின் 4 விக்கெட்டையும் வீழ்த்தி மே.இ.தீவு அணியை சுருட்ட உத வினர்.  இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 3 -வது மற் றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வாங்க் டே மைதானத்தில் 22 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது.  முன்னதாக இதில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 590 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் பிராவோ 166 ரன்னும், கே. எட்வர்ட்ஸ் 86 ரன்னும், பொவெல் 81 ரன்னும், பரத் 62 ரன்னும், பிரா த் வெயிட் 68 ரன்னும், சாமுவேல்ஸ் 61 ரன்னும் எடுத்தனர்.  இந்திய அணி சார்பில், இளம் சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் 156 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். ஆரோன் 103 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, இஷாந்த் சர்மா மற்றும் ஓஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.  அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 135.4 ஓவரில் அனைத் து விக்கெட்டையும் இழந்து 482 ரன்னை எடுத்தது. அஸ்வின் 103 ரன் னையும், டெண்டுல்கர் 94 ரன்னையும், டிராவிட் 82 ரன்னையும், காம் பீர் 55 ரன்னையும், கோக்லி 52 ரன்னையும், சேவாக் 37 ரன்னையும், லக்ஷ்மண் 32 ரன்னையும், எடுத்தனர்.  பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி இந்திய பந்து வீச் சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 57.2 ஓவ ரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னில் சுருண்டது. அந்த அணி தரப்பில், பிராவோ அதிகபட்சமாக 48 ரன்னையும், பிராத் வெயிட் 35 ரன்னையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி சார்பில், ஓஜா 47 ரன்னைக் கொடுத் து 6 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 34 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட்எடுத்தார்.  மே.இ.தீவு அணி 2-வது இன்னிங்சில் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந் ததால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்தாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய வீரர்கள் கடைசி கட்டத்தில் சொதப்பி விட்டனர். இந்திய அணி வெற்றி பெற 243 ரன் என்ற இலக்கு வைக்கப்பட்டது. இந்திய அணி இறுதியில், 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்னை எடுத்து இருந்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இந்திய அணி சார்பில் சேவாக் 65 பந்தில் 60 ரன்னை எடுத்தார். கோக் லி 114 பந்தில் 63 ரன்னை எடுத்தார். டிராவிட் 33 ரன்னையும், லக்ஷ்ம ண் 31 ரன்னையும் எடுத்தனர். தோனி 13 ரன்னிலும், காம்பீர் 12 ரன் னையும், அஸ்வின் 14 ரன்னையும் எடுத்தனர்.  மே.இ.தீவு அணி தரப்பில், ராம்பால் 56 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். சாமுவேல்ஸ் மற்றும் பிஷூ தலா 2 விக்கெட்டையும், எப். எட்வர்ட்ஸ் 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டி மற்று ம் தொடர் நயாகயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்