முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் புயல் சின்னம்: பாம்பனில் 3 ம் எண் எச்சரிக்கை கூண்டு

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், நவ. - 27 - வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் பாம்பனில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  வங்கக் கடலில் வடமேற்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3 ம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டுள்ளது.  இதன் மூலம் தொலை தூரத்தில் வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் ஆகிய கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது சிரமம் ஏற்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இம்மழையால் மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளில் உள்ள தாழ்வான தெருக்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. புயல் எச்சரிக்கை அறிவிப்பால் நேற்று முதல் ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்து வந்தது.  இதையடுத்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் இங்குள்ள 2 ஆயிரம் விசைப்படகுகள், 600 நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையால் சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கியுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago