முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: ஹர்பஜன் சிங் மீண்டும் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. - 28  - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக 17 பேர் கொ  ண்ட இந்திய கிரிக்கெட்அணி வீரர்கள் பட்டியலை கிரிக்கெட்  வாரிய ம் நேற்று அறிவித்தது. இதில் ஹர்பஜன் சிங் மீண்டும் நீக்கப்பட்டு இரு க்கிறார். அவருக்குப் பதிலாக அஸ்வின் இடம்  பெற்று இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் அடுத்த மாத ம் (டிசம்பர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப் டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணிக்கு எதிராக விளை யாட இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் முதல் போட்டி டிசம்பர் மாதம் 26 -ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொட ங்குகிறது. இதில் இடம் பெறும் இந்திய வீரர்கள் தேர்வு நேற்று மும்பையில் நடந்தது. முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவி னர் இந்திய அணியை தேர்வு செய்தனர். இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது பற்றி தேர்வுக் குழுவினர் ஆலோசித் தனர். ஆனால் தற்போது மே.இ.தீவுக்கு எதிரான தொடரில் ஓஜா மற் றும் அஸ்வின் இருவரும் சிறப்பாக ஆடி தங்களது இடத்தை தக்க வை த்துக் கொண்டனர். எனவே மூத்த வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பு மங்கியது. அவர் மீண்டும் அணியில் இடம் பெறவில்லை. சாம்பியன்ஸ் லீக்கில் அவர் நன்கு ஆடியதால் அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கள் பலர் கருத்து தெரிவித்தனர். காயத்திலிருந்து முழுவதும் மீளாத முன்னணி வேகப் பந்து வீச்சாள ரான ஜாஹிர்கான் 17 -வது வீரராக சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் இங்கிலாந்து பயணத்தில் பாதியிலேயே நாடு திரும்பினார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, 8 முன்னணி வீரர்கள் காயம் அடைந்து நாடு திரும்பியது நினைவு கூறத்தக்கது. தவிர, ரோகித் சர் மா மற்றும் பிரவீன் குமார் இருவரும் புதிதாக அணியில் இடம் பெற் று உள்ளனர். 

இந்திய அணி : - தோனி (கேப்டன்), சேவாக், காம்பீர், டிராவிட், டெ ண்டுல்கர், வி.வி.எஸ். லக்ஷ்மண், கோக்லி, ரோகித் சர்மா, அஸ்வின், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார், ஓஜா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், ரகானே, சகா, மற்றும் ஜாஹிர்கான் ஆகியோர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்