முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டி லியாண்டர் பயஸ் - பூபதி ஜோடி அரை இறுதிச் சுற்றில் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், நவ. - 28  - இங்கிலாந்தில்நடைபெற்று வரும் ஏ.டி.பி உலக டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி அரை இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தது. ஆடவருக்கான ஏ.டி.பி. சார்பிலான சுற்றுப் பயணப் போட்டிகளில் கடைசி போட்டி இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற டாப் - 9 ஜோடி களத்தில் குதித்துள்ளது. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இதற்காக வீரர்கள் தீவிரப் பயிற்சியுடன் வந்துள்ளனர். இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.  இரட்டையர் பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடியும், அமெரிக்காவின் பிரையான் சகோதரர்களும் பலப் பரிட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் லியாண்டர் மற்றும் பூபதி ஜோடி அபாரமாக ஆடி, 6 - 4, 6 - 2 என்ற நேர் செட் கணக்கில் பாப் பிரையான் மற்றும் மைக் பிரையான் இணையை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்தப் போட்டி சுமார் 50 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதில் இந்தி ய ஜோடி தரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டி முடிந்ததும் பயஸ் மற்றும் பூபதி ஜோடி பிரிந்து வேறு ஜோடியுடன் இணைய முடிவு செய்துள்ளது. அடுத்து நடக்க இருக்கும் அரை இறுதிச் சுற்றில் லியாண்டர் மற்றும் மகேஷ் ஜோடி போலந்தைச் சேர்ந்த மனுஷ் பிரிஸ்டென்பர்க் மற்றும் மார்சின் மாட்கோவிஸ்கி இணையிடம் மோத உள்ளது. 

முன்னதாக நடைபெற்ற முதல் செட்டில் இரு ஜோடிகளும் வெற்றிக் காக கடுமையாக மோதின. மாறி மாறி புள்ளிகள் பெற்றன. இறுதியி ல் பயஸ் மற்றும் பூபதி ஜோடி 6- 4 என்ற கணக்கில் செட்டை கைப்பற் றியது. 

பின்பு நடந்த 2 -வது செட்டில் துவக்கம் முதலே இந்திய ஜோடியின் கை ஓங்கியது. அதே நேரம் எதிரணி அடுத்தடுத்து தவறுகள் செய்தது. இதனால் இந்திய ஜோடி எளிதாக இதில் வெற்றி பெற்றது. 

அரை இறுதிச் சுற்றில் லியாண்டர் மற்றும் மகேஷ் ஜோடி 4 - 6, 6 - 4, 6 - 10 என்ற செட் கணக்கில் போலந்து இணையிடம் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய ஜோடி இறுதிச் சுற்று வாய்ப்பை இழந் தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்