பாகிஸ்தான் அதிபருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      உலகம்
Zardari

லாகூர்,மார்ச்.12 - பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை லாகூர் கோர்ட்டு தள்ளிவைத்துளளது. பாகிஸ்தான் அதிபராக ஜர்தாரி இருக்கிறார். அவர் அதிபராக இருப்பதோடு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவராகவும் இருக்கிறார். பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி ஒருவர் இரண்டு பதவியில் இருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அதனால் ஜர்தாரி ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளில் இருப்பதை எதிர்த்து கடந்த 2009-ம் ஆண்டு லாகூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது லாகூர் ஐகோர்ட்டின் பல்வேறு பெஞ்ச்களில் நடைபெற்றது. வழக்கில் இருதரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் தீர்ப்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இஜாஸ் அகமத் செளத்ரி தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: