முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொட்டியது மழை: வைகைஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி நவ.- 27 - வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த பலத்த மழையின் காரணமாக வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே கரையோர கிராம மக்கள் வெளியேற கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் எதிரொலியாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் மழை பெய்வது அடியோடு நின்ற நிலையில் வைகை ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்சின்னம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடைமழை பெய்தது. நேற்று பிற்பகலில் வைகை ஆற்றில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுமார் 3.30 மணியளவில் வைகை ஆற்றில் வந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து 4.30 மணியளவில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 இதனால் ஆற்றில் அதிக இரைச்சலுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கால் வருசநாடு, முருக்கோடை, சிங்கராஜபுரம், தங்கம்மாள் புரம், தும்மக்குண்டு ஆகிய கிராமங்களில் வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் பொருத்தப்பட்டு இருந்த குடிநீர் குழாய்கள் மற்றும் மின் இணைப்பு கேபிள்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதன்தாரணமாக அந்த ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் தடைப் பட்டுள்ளது. இதேபோல வருசநாடு-சிங்கராஜபுரம் இடையே வைகை ஆற்றின் கரையில் கட்டப்பட்டு இருந்த தடுப்புசுவர் வெள்ளத்தில் அடியோடு இடிந்து விழுந்தது.தொடர் மழை காரணமாக குமணன்தொழு கிராமத்தில் ஏற்கனவே சேதமடைந்து காணப்பட்ட ஊராட்சி அலுவலகம் இடிந்து விழுந்தது. தொடர்மழை காரணமாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏராளமான வீடுகள் சேதமடைந்;துள்ளது. குறிப்பாக தங்கம்மாளபுரம் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்து உள்ளதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீடுகள் இடிந்துவிழுந்தாலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்தகாரணத்தால் மயிலாடும்பாறை- கடமலைக் குண்டு இடைப்பட்ட இடத்தில் சாலையில் வெள்ள நீர் பெருகியது. இதன்காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ராயர் கோட்டை, செல்வராஜபுரம், வண்டியுர்ை, தண்டியர்குளம், அஞ்சரைப்புளி ஆகிய கிராமங்கள் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.வைகை அணையின் மொத்தம் உயரம் 71 அடி ஆகும். ஆணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன், தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாகம். சமீபத்தில் அணை நிரம்பியதையொட்டி மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டஙகளுக்கு பாசனத்திற்தாக வினாடிக்கு 3,760 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.இந்ந்லையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. ந்ேற்று இரவு 9 மணி அளவில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைணக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து தொடர்நது அதிகரிக்கும் பட்சத்தில்;, அணையின் முழு கொள்ளளவை மீண்டும் எட்டும். இதனை கருத்தில் கொண்டு நேற்றுக்காலை 10 மணி முதல் ; வினாடிக்கு 8400; கன அடி வரை வெளியேற்றப்படுகிறது.

இதைதொடர்ந்து தேனி, திண்டுக்கல்;, மதுரை, மாவட்டங்களில் வைகை ஆற்றுகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago