முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிமராத்தான் போட்டி: எத்தியோப்பிய வீரர் டெசிசா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. - 28 - டெல்லியில் நடைபெற்ற அரை மராத்தான் போட்டியின் ஆடவர் பிரிவில் எத்தியோப்பிய வீரர் லெலிசா டெசிசாவும், மகளிர் பிரிவில் கெ ன்ய வீராங்கனை லக்கிகபுவும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். ஏர்டெல் சார்பிலான 7 - வது டெல்லி அரை மராத்தான் போட்டி தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பட்டத்தைக் கை ப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரரக்கணக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்  கலந்து கொண்டனர். இந்தப் போட்டியை 30,000 ரசிகர்கள் கண்டு களித்தனர். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகல் சிறப்பாக செய்து இருந்த னர். இதில் ஆடவருக்கான பிரிவில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த லெலி சா டெசிசா முதலாவதாக வந்து பட்டம் வென்றார். அவர் இந்த தூரத் தை 59.30 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கடந்த வருடம் 2 -வது இடம் பிடித்த டெசிசாவிற்கு கென்ய வீரர்கள் இரண்டு பேர் கடும் சவாலை அளித்தனர். இருந்த போதிலும் அவர்களது சவாலை முறியடித்த டெசிசா முதலிடம் பெற்றார். கென்ய வீரர்கள் ஜெப்ரே கிங்சாங் மற்றும் மைக் கிஜென் இருவரும் முறையே 2 -வது மற்றும் 3 -வது இடத்தைப் பிடித்தனர். அதிகாலை நேரத்தில் கடும் குளிரில் நடந்த இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்க ளை வழிநெடுகிலும் ரசிகர்கள் கைதட்டியும், ஆரவாரம் செய்து உற் சாகப்படுத்தினார்கள். மகளிருக்கான பிரிவில் கென்ய வீராங்கனை லூசி கபு முதலாவதாக வந்து பட்டத்தை கைப்பற்றினார். அவர் இந்த தூரத்தை 1 மணி மற்றும் 07.04 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆனால் கடந்த வருடம் முதலிடம் பிடித்த எத்தியோப்பிய வீராங்க னையால் இந்த வருடம் பட்டத்தை தக்க வைக்க முடியவில்லை. அவ ர் இந்தப் போட்டியில் 3 -வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். கென்ய வீராங்கனை ஷரோன் செராப் 2 -வது இடம் பிடித்தார். 

இந்திய தரப்பில், ஆடவர் பிரிவில் சுரேஷ் குமாருக்கும், மகளிர் பிரிவில் லலிதா பாப்பருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அவர் கள் முறையே இந்த தூரத்தை 01.04.08 மற்றும் 01.17.38 வினாடிகளில் கடந்தனர். இந்தப் போட்டியில் ஒட்டு மொத்தத்தில் இந்திய வீரர் சுரேஷ் குமார் 20-வது இடத்தையும், இந்திய வீராங்கனை லலிதா பாப்பர் 19-வது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்