சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      உலகம்
China-Earthquake

பெய்ஜிங்,மார்ச்.12 - சீனாவிலும் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியானார்கள் மற்றும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்தது. இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியிருப்பதால் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது. ஜப்பானுக்கு அண்டையில் உள்ள நாடுகளிலும் சீனாவும் ஒன்றாகும். ஜப்பானில் நேற்று கடந்த 124 ஆண்டுகளுக்கு பெரிய அளவில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: