முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுவோம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கட்டாக், நவ. 30 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப் பாக ஆடி வெற்றி பெற்றதைப் போல ஒரு நாள் தொடரையும் கைப்பற்றுவோம் என்று இந்திய அணியின் தற்காலிக கேப்டனான வீரேந்தர் சேவாக் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் நேற்று மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. 

கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் இருவருக்கும் ஒரு நாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சேவாக் தற்காலிக கேப்டனாக பணியாற்றுகிறார். 

மே.இ.தீவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து கேப்டன் சேவாக் கூறியதாவது - உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு, நான் விளையாடும் முதல் ஒரு நாள் ஆட்டம் இதுவாகும். 

மே.இ.தீவுக்கு எதிராக நடக்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட இந் தத் தொடரில் சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணி பலமிக்கதாக உள்ளது. 

டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசியது போல ஒரு நாள் தொட ரிலும் சுழற் பந்து வீரரான அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார். அவரது திறமையை பாராட்டி கிரிக்கெட் வாரியம் அவருக்கு சர்தேசாய் விருது வழங்குகிறது. 

அவர் மேலும் பல விருதுகளை வாங்க எனது வாழ்த்துக்களை தெரிவி த்துக் கொள்கிறேன். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரி ய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை எதிர்காலத்தில் பெறு வார் என்ற நம்பிக்கை உள்ளது.  

அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும். 5 ஆட்டத்தில் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தலாம். ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல்ரவுண்டர். 

ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடுவார். வேகப் பந்து வீரர் கள் வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசினார்கள். ஒரு நாள் தொடரிலும் நன்றாக வீசுவா ர்கள். 

மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சிறப்பாக ஆடி வென்ற தைப் போல ஒரு நாள் தொடரிலும் நன்கு ஆடி வெற்றி பெறுவோம் இவ்வாறு கேப்டன் சேவாக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்