திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழா

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், நவ.30 - திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை 9.15 மணிமுதல் 9.45 மணிக்குள் தனுசு லக்கணத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை அடுத்து வரும் 7-ம் தேதி முருகனுக்கு பட்டாபிசேகம் நடக்கிறது. 8-ம் தேதி காலை 9 மணிக்கு சிறிய வைரதேரோட்டமும் மாலை பாலதீபமும் ஏற்றப்படும். இதையடுத்து மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இரவு பதினாறுகால்மண்டபத்தில் சொக்கப்பனை கொளுத்தும் இடத்தில் சொக்கப்பனை கொள்ளுத்தப்படும்.  விழா ஏற்பாடுகளை இணை ஆணையாளர் ஜெயராமன், துணை ஆணையாளர் செந்தில் வேலவன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: