Idhayam Matrimony

விஷ்ணு-ரம்யா நம்பீசன் நடிக்கும் குள்ளநரி கூட்டம்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.12 - பலம் வாய்ந்த யானை, சிங்கம், புலி போன்ற மிருகங்களே, குள்ளநரியின் சூழ்ச்சிக்கும்,  தந்திரத்திற்கும் முன்னால் அஞ்சி நிற்கும். இது நம்முடைய சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்த விஷயம். இதையே மையமாக வைத்து உருவான கதைதான் குள்ளநரி கூட்டம். காதலை மையமாக கொண்டு, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து படம் எடுத்துள்ளதாக கூறுகிறார் புதுமுக இயக்குநர் ஸ்ரீபாலாஜி. இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் இணை இயக்குனராக வெண்ணிலா கபடி குழுவில் பணியாற்றியுள்ளார். விஷ்ணு, ரம்யா நம்பீசன் நடிக்கும் இப்படத்தில் ``வெண்ணிலா கபடிக்குழு'' வில் நடித்த நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மற்றுமொரு வெற்றிக்காக கூடியிருப்பது குள்ளநரி கூட்டத்தின் தனிச்சிறப்பு.

நடுத்தர மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை புதிய தொழில் நுட்பங்களை கொண்டு படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜே.லஷ்மன், அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வண்ணம் நான்கு பாடலுக்கு இசையமைத்துள்ளார் வி.செல்வகணேஷ், தனக்கே உரிய பாணியில் படத்தொகுப்பு செய்துள்ளார் மு.காசிவிஸ்வநாதன், இயல்பான காட்சிகளுக்கு ஏற்றார் போல் அரங்க அமைப்பை ஜனரஞ்சகமாக அமைத்துள்ளார் கலை இயக்குனர் முனிபால்ராஜ், நக்கலும், நையாண்டித்தனமும் கொண்ட மதுரை தமிழில் நகைச்சுவை விருந்து இ.கிளைட்டனின் வசனத்தில், நடன இயக்குனர் தினேஷின் நடனமும், தலீப் சுப்பராயனின் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்கிளும் படத்தின் சிறப்பு அம்சம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்