முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.நகரில் `சீல்'களை அகற்ற முடியாது: சென்னை ஐகோர்ட்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.1 -சென்னை தி.நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை மாநகராட்சி பூட்டி சீல் வைத்ததை அகற்ற முடியாது என்று சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:- சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கு சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (சி.எம்.டி.ஏ.) சமீபத்தில் `சீல்' வைத்தன.  தி.நகரில் பாதிக்கப்பட்ட 26 வர்த்தக நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சார்பில் ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கம், உஸ்மான் சாலை வியாபாரிகள் சங்கம் ஆகியவை டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தது. அதில் மூடப்பட்ட கடைகளை திறக்க அனுமதிக்கும்படி கேட்டு இருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே மூடப்பட்ட கடைகளின் `சீல்'களை அகற்றக் கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் சார்பில் வக்கீல்கள் அல்டாப் முகமது, அரிமா சுந்தரம் ஆகியோர் வாதாடினார்கள். ஒவ்வொரு அரசும் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதால் தி.நகர் வியாபாரிகளுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. ஏற்கனவே நீதிபதி மோகன் கமிட்டி பரிந்துரையில் தி.நகரை வர்த்தக பகுதியாக அறிவித்தது. கட்டிடங்களை சட்டபூர்வமாக ஒழுங்குப்படுத்தலாம் என்று அறிவித்து உள்ளது. எனவே சீல்களை கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்கள். நுகர்வோர் அமைப்புகள் சார்பில் வாதாடிய வக்கீல் மோகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சீல் வைக்கப்பட்ட கடைகளை இடிக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்.   

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோர், தி.நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படும் கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட `சீல்'களை தற்போது அகற்ற முடியாது. வழக்கின் முடிவில் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்