முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு பிரச்சனை: சுப்ரீம் கோர்ட்டில் மனு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.2 - முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்கிவைக்க சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த கேரள அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டப்போவதாக கேரள அரசு கூறிவருகிறது. முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் இதனால் அந்த அணைக்கு ஆபத்து இருப்பதாகவும் இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கேரள அரசு மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது. 

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கிவைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும்கூட அந்த உத்தரவை கேரள அரசு அமுல்படுத்தவில்லை. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணைகுறித்து மக்களிடையே தேவையில்லாத கருத்துக்களை கூறி கேரள அரசும், அதனைச் சார்ந்தவர்களும் பீதியை கிளப்பி வருகிறார்கள். மேலும் புதிய அணை கட்டப்போவதாகவும் கேரள அரசு கூறிவருகிறது. இதுபோன்ற தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என  கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணை பலமாகவும், உறுதியாகவும் உள்ளது என்று அதனை ஆய்வு செய்த வல்லுனர்கள் கூறியுள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக கேரள அரசு பீதியை கிளப்பி வருகிறது. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்துவரும் நிலையில் கேரள அரசு இதுபோன்ற தேவையற்ற பீதியை கிளப்பிவருகிறது. எனவே மக்கள் நலன் கருதி பீதியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடக் கூடாது என கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago